மாணவிகளுடன்..
நம்பிக்கை தருகிறார் போல் அடுத்த தலைமுறை பல விஷயங்களில் சாதனைகளைப் படைத்து வந்தாலும், செல்போன், உள்ளங்கைக்குள் உலகம் என்று அசுர வளர்ச்சி காணும் விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை எங்கு நிறுத்தப் போகிறதோ என்கிற பதைபதைப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. டெல்லியில் மெட்ரோ பாலத்தின் கீழ் பள்ளி சீருடை அணிந்த படி ஒரு மாணவனும்,
இரு மாணவிகளும் இருக்கின்றனர். மாணவன், அந்த இரு மாணவிகளுக்கும் பொது இடத்தில், ஆபாசமான செயல்களில் ஈடுபவதும் அவர்களுக்கு முத்தம் கொடுப்பதுமாக தங்களை அந்த வழியே கடந்து செல்பவர்கள் பார்க்கிறார்கள் என்கிற எந்தவிதமான அச்சமும், லஜ்ஜையுமில்லாமல் மூவரும் செய்கிற சேட்டைகள் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே பிற நகரங்களை ஒப்பிடுகையில், டெல்லியில் பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் மாணவ, மாணவிகள் ஈடுபடுவதும், அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாவதும் வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில் மற்றொரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் சிறுவன் இரண்டு பள்ளி மாணவிகளுக்கு முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் மாணவன் மற்றும் ஒரு மாணவி பள்ளி சீருடையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ டெல்லி மெட்ரோ பாலத்தின் கீழ் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ வைரலான நிலையில், இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பொது இடங்களில் இந்த மாதிரி அத்துமீறும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Delhi Metro Bridge ke Neeche School Dress me Padhai Chal rha Guys 😐😐
. pic.twitter.com/zD4t6omvDv— Raka (@Raka440) November 20, 2023