யூடியூப் பார்த்து கருவை கலைத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

546

நெல்லூர்..

நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தில் வசித்து வருபவர் 19 வயது இளம்பெண். இவர் நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்தது யாருக்கும் தெரியாது. வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார்.

வகுப்பு இடைவேளையின் போது கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு சென்ற போது அவர் மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தார்.

அப்போது கதவை மூடி உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் மாணவி விளையாட வரவில்லை. அவருடைய தோழிகள் மாணவியை அழைத்துவர வகுப்பறைக்கு வந்தனர்.


வகுப்பறை கதவு மூடிக்கிடந்தது. அவர்கள் கதவை தட்டினர் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்தனர். அங்கு ரத்தப்போக்குடன் மாணவி மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

மாணவியின் பக்கத்தில் 6 மாத சிசு ஒன்றும் கிடந்தது.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த மாணவியையும் கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியும், குழந்தையும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் மாணவி வகுப்பறையில் யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அதிகப்படியான ரத்தபோக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கல்லூரி மாணவியின் மொபைலை ஆய்வு செய்த போது அவர் கார் டிரைவர் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த டிரைவர் மூலம் கல்லூரி மாணவி கர்ப்பமாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில் கார் டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி யூடியூப் பார்த்து வகுப்பறையில் கருக்கலைப்பு செய்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.