ரகசிய உறவில் இருந்த காவல் ஆய்வாளர் : கையும் களவுமாக பிடித்த முதல் மனைவி : பின்னர் நடந்த சம்பவம்!!

700

ஆந்திரா..

ஆந்திர மாநிலத்தில் வெள்ளூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக சாம்ராஜ்யம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.

ஒரு மகனும் மகளும் வாரிசுகளாக உள்ளனர். கடந்து 2017 ஆம் ஆண்டு மனைவியை கைவிட்ட வாசு, மௌனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.

அண்மை காலமாக நெல்லூரில் உள்ள போஸ்டல் காலனியில் வசிக்கும் பெண் ஒருவருடன் வாசுவுக்கு ரகசிய உறவு இருந்திருக்கிறது. இந்த தகவல் சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்ததும், தன்னையும் குழந்தைகளையும் கைவிட்டு சென்ற ஆத்திரம் வந்திருக்கிறது.


தனது உறவினர்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொண்டு சாம்ராஜ்யம், கள்ளக்காதலியுடன் இருந்த கணவரை மடக்கிபிடித்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

கதவைத் தட்டி திறக்க செய்து கணவன் அவருடன் இருந்த கள்ள காதலி இரண்டு பேருடன் நியாயமா என்று கடும் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.

இது தகவல் அறிந்ததும் நெல்லூர் போலீசார் விரைந்து சென்று வாசு அவருடைய மனைவி சாம்ராஜ்யம் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.