ரகசிய உறவை தொடரமுடியாத விரக்தி : கள்ளகாதலனுடன் இளம் பெண் தற்கொலை!!

451

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி அடுத்த கடியபட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் அதே ஊரைச் சேர்ந்த சகாய சாமினி என்பவருடன் கள்ள உறவில் இருந்திருக்கிறார்.

இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது. சகாய சாமிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்திருக்கிறார். இதனால் சகாய சாமினிக்கும் ஆரோக்கிய சூசை நாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ள உறவாக மாறி இருக்கிறது.

கணவர் வெளிநாட்டில் இருந்து வாங்கி வரும் பணத்தை கள்ளக்காதலனுக்கு கொடுத்திருக்கிறார் சகாயசாமினி. அதை வைத்து கார், வேன் வாங்கி சம்பாதித்து தொழில் செய்து வந்திருக்கிறார் ஆரோக்கியநாதன் .


இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஊராருக்கு தெரிய வர இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்று இருக்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார் சகாய சாமினி. அவரின் கணவர் இதை மன்னித்து அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கணவர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி விட்டதால் இனி கள்ளக்காதலனுடன் உறவை தொடர முடியாது என்று மனம் வருந்திய அந்தப் பெண் மீண்டும் வீட்டை விட்டு கள்ளக்காதனுடன் சென்றிருக்கிறார்.

இந்த முறை தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். காரில் மகன்களுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வைத்துவிட்டு, இருவரும் விஷமருந்தி இருக்கிறார்கள்.

பின்னர் காரில் இருந்து இறங்கி, அமர்ந்து அப்படியே கீழே சாய்ந்து இருக்கிறார்கள். பொழுது விடிந்தது காலையில் இரண்டு பிள்ளைகளும் அம்மா இங்கே அப்பா எங்கே கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் வந்து இருவரின் உடல்களையும் மீட்டுச் சென்றுள்ளனர்.