ராணுவத்தில் இருந்து எப்போதாவது தான் கணவர் வீட்டுக்கு வருவார்! தனியாக வசித்த இளம் மனைவியை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!!

504

கொள்ளை……

இந்தியாவில் கணவர் இராணுவத்தில் பணிபுரியும் நிலையில் மனைவி வீட்டில் இல்லாத போது திருடர்கள் உள்ளே புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரவீந்திரா மிஸ்ரா. இவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். வருடத்தில் ஒருமுறை மட்டும் விடுமுறைக்கு வீட்டுக்கு வருவார். இதையடுத்து ரவீந்திராவின் மனைவி அபர்னா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

நேற்று பகல் 12 மணிக்கு தனது மாமியார் வசிக்கும் வீட்டுக்கு குழந்தையை எடுத்து கொண்டு அபர்னா சென்றார். பின்னர் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவை திறந்த போது அபர்னா அதிர்ச்சியடைந்தார்.

காரணம் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதன் உள்ளே இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதோடு எல்.இ.டி டிவியையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


இது குறித்து அபர்னா பொலிசில் புகார் அளித்தார், பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த பார்த்தனர். அப்போது வீட்டின் மேற்கூரை வழியாக கொள்ளையர்கள் புகுந்ததை தெரிந்து கொண்டனர்.

மேலும் ரவீந்திரா இராணுவத்தில் இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்த கொள்ளையர்கள், அவர் மனைவி வெளியில் சென்றதையும் நோட்டமிட்டே இந்த கொள்ளை சம்பவத்தை நிறைவேற்றியதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.