அபிதா..

விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த படம் சேது, இந்த படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் அபிதா.

தொடர்ந்து தமிழ், மலையாளம் என தென்னிந்திய படங்களில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது திருமதி செல்வம் சீரியல் தான், தொடர்ந்து குழந்தைகளுடன் செட்டிலான அபிதா, மாரி என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ராமராஜன்- நளினி விவாகரத்துக்கு தான் காரணம் என வெளியான தகவல்களால் மன உளைச்சலில் தவித்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 2001-ம் ஆண்டு வெளியான சீறிவரும் காளை படத்தில் நாயகியாக நடித்தேன்.

படப்பிடிப்பின் போது யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பேன், அப்படி இருந்தும் ராமராஜன்- நளினி விவாகரத்துக்கு நான் காரணம் என தகவல்கள் வெளியானது.

நான் நளினி மேடமை பார்த்தது கூட கிடையாது, அந்த தகவலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன், இதனால் பல மாதங்கள் கஷ்டப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.















