லண்டனில் வழி கேட்பது போல் வந்து இளைஞர்கள் செய்த திடுக்கிடும் செயல்! எச்சரிக்கை: பொலிசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி!!

262

பிரித்தானியாவில் வழி கேட்பது போல் வந்து 60 வயது மதிக்கத்தக்க நபரை தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்சை கொள்ளையடித்த சென்ற நபர்களின் சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Chancery Land இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே வந்த இரண்டு பேர் Tottenham Court சாலைக்கு எப்படி செல்வது என்று வழி கேட்டனர்.

இது குறித்து அவர் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென்று அவரின் பின்னால் இருந்த நபர் தாக்க, மற்றொருவர் அவரின் கையில் இருந்த தொலைபேசியை பறித்து தூக்கி எறிந்தார்.

இதையடுத்து அந்த நபர்களில் ஒருவர் அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்சை கொள்ளையடித்துவிட்டு, தனக்கு அது கிடைத்துவிட்டது என்று கூறியதால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, இதில் இரண்டு பேர் இல்லை, மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர் என்று கூறி, சந்தேக நபர்களின் சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் Theobalds சாலை வழியாக தப்பி ஓடுவதை பார்க்க முடிகிறது.

லண்டைன் மத்திய வடக்கு கட்டளை பிரிவைச் சேர்ந்த துப்பறியும் கான்ஸ்டபிள் Alejandra Gomez இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார். அவர், சந்தேக நபர்களில் இருவர் பாதிக்கப்பட்ட நபரை அணுகியதாகத் தெரிகிறது. மூன்றாவது ஒரு நபரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் மூன்று நபர்களின் சிசிடிவி படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளோம், அவர்களை அடையாளம் காணும் எவரும் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச் மொடல் 1116710BLNR எனவும், இந்த மொடல் கொண்ட வாட்ச்களை யாரேனும், நகைக்கடைகளிலோ அல்லது வேறு எங்கு விற்க வந்தாலோ, பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கடிகாரத்தின் மதிப்பு 6,000 பவுண்ட் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது,