லாட்ஜில் பிணமாக கிடந்த மனைவி… தூக்கில் தொங்கிய நிலையில் கணவன்! அலறி போன ஊழியர்கள்…!

1095

தமிழகத்தில் லாட்ஜில் மனைவி சடலமாக கிடக்க, அதற்கு சற்று தொலைவில் கணவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் புருஷோத்தமன்(35). இவருக்கும் அமுலு(26) என்பவருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

புருஷோத்தமன் இராணுவ வீரராக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து அமுலு 2-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.

இந்நிலையில் புருஷோத்தமனின் அப்பா ஆறுமுகத்துக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போயுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரில் இராணுவ பணியில் இருந்த அவர், தந்தையைப் பார்ப்பதற்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.


அதன் பின், அப்பாவை சிகிச்சைக்காக, சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தே பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக மருத்துவமனையின் அருகிலே லாட்ஜில் ரூம் எடுத்து மனைவியுடன் புருஷோத்தமன் தங்கியுள்ளார்.

இதையடுத்து சம்பவ தினத்தன்று புருஷோத்தமனை பார்ப்பதற்காக அவருடைய அண்ணன் ராஜ்குமார் லாட்ஜுற்கு வந்துள்ளார்.

ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டிருக்க, புருஷோத்தமனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அறையின் உள்ளே போனின் ரிங் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜ்குமார் உடனடியாக லாட்ஜில் இருக்கும் மேனேஜருக்கு தகவலை கூறியுள்ளார்.

மேனேஜர் அறையின் இன்னொரு சாவி மூலம் கதவை திறந்து பார்த்த போது, அமுலு கட்டில் பிணமாகவும், சற்று தூரத்தில் ரூமின் பேனில் புருஷோத்தமான் தூக்கில் தொங்கிய நிலையிலும் கிடந்துள்ளார்.

இதைக் கண்டு லாட்ஜின் மேலாளர் மற்றும் ராஜ்குமார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரின் சடலங்களையும் மீட்ட போது, அமுலுவின் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் கிடந்துள்ளது.

இதனால் பொலிசார் அமுலு நிச்சயமாக கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கியிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், எதற்காக 2 பேரும் எதற்காக உயிரிழந்தனர் என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. பொலிசார் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு பின்னரே இருவரின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவரும் என்று கூறியுள்ளனர்.