கேரளாவில்..

வீட்டை விட்டு வெளியில் எங்கே சென்றாலும் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம்.
நாம் இருக்கும் இடத்தை நம் மொபைல போன்கள் காட்டி கொடுத்து விடும். அதே போல் நாம் தங்கியிருக்கும் இடத்தை அந்தந்த இடத்தில் இருக்கும் கேமிராக்கள் பதிவு செய்து கொண்டே இருக்கும், சாலையிலோ, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உணவகங்கள்,

தங்குமிடங்கள் தொடங்கி சில இடங்களில் கழிவறை வரை இந்த கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் செயல்பட்டு வருகிறது தனியார் தங்கும்விடுதி. இதில் ஊழியராக பணிபுரிந்து வருவபர் முனீர்.
இவர் தான் பணிபுரிந்துவரும் லாட்ஜின் அறைகளில் தேவையானவற்றை தயார் செய்து தருபவர். இவர் அறைகளில் கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமராவை பொருத்தி இங்கு தங்குபவர்கள் படம் பிடித்துள்ளார்.

அதிலும் புதிதாக திருமணமான ஜோடிகள் உல்லாசமாக இருக்கும் போது கேமிராவில் பதிவு செய்து அந்த வீடியோவை காட்டி அவர்களிடம் பணம் பறிப்பதே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தார்.
அதே போல் ஒரு புதுமணத் தம்பதியை ரகசிய படம்பிடித்த முனீர், அந்த வீடியோவை காண்பித்து புதுமண தம்பதியை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்த தம்பதிகள் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் காவல்துறையின் உதவியுடன், புதுமண தம்பதி பணம் தருவதாகக்கூறி முனீரை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்தனர். பண ஆசையில் வந்த முனீரை, மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக பிடித்து தட்டி தூக்கினர்.
இது குறித்து முனீரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதேபோல் அந்த லாட்ஜில் தங்க வந்த பல ஜோடிகளை ரகசிய கேமராவில் வீடியோ எடுத்து பணம் பறித்து வந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது.















