வகுப்பறையில் ஒளிபரப்பான ஆ.பாச படம்… அதிர்ந்து போன மாணவர்கள் : பின்னர் நடந்த விபரீதம்!!

1014

நாகை..

நாகையில் அறிவியல் கணினி பாடம் நடத்தும் போது புரொஜெக்டரில் 3 நிமிடம் ஆ.பா.ச வீ.டியோ ஒளிபரப்பான சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ஜெ.ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கணினி பாடம் நடத்துவதற்காக ப்ரொஜெக்டர் அறைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்த பொழுது யூடியூப் இணைப்பு மூலமாக புரொஜெக்டரில் வகுப்பு நடைப்பெற்று உள்ளது. அப்போது திடீரென ஆ.பா.ச கா.ட்சிகள் கொண்ட வீடியோ ஓடியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மாணவிகள் அ.திர்ச்சி அடைந்துள்ளனர்.


சுமார் மூன்றரை நிமிடங்கள் அந்த ஆ.பா.ச வீ.டியோ ஓடிய நிலையில் மாணவ, மாணவிகள் செய்வதறியாது புத்தகத்தால் முகத்தை மூடியவாறு வகுப்பறை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் அதில் ஒரு மாணவி பள்ளியில் நடந்தவற்றை பெற்றோரிடம் சொல்லி உள்ளார்.

அ.திர்ந்து போன பெற்றோர் உடனடியாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவியோடு சென்று ஆட்சியரிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரித்து புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பள்ளியில் உரிய வி.சாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கு.ழந்தைகள் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவை அடுத்து முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைகள் நல அலுவலர் மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அலுவலர் உள்ளிட்டோர் பள்ளியில் மாணவ மாணவிகளுடன் விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர்.

அப்போது ஆ.பா.ச வீ.டியோ ஓடியது உறுதி படுத்தப்பட்ட நிலையில் வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பள்ளியில் ஆ.பா.ச வீ.டியோ ஓடியதை ஆட்சியரிடம் புகார் அளித்ததை அறிந்த பள்ளி முதல்வர் ஹோனா மா.ணவியின் பெற்றோரை தொடர்புக் கொண்டு மி.ரட்டும் தொனியில் பேசி உள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகி ப.ரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.