வயிற்றில் ஏற்படும் பு ண் ணை போக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

631

அல்சர்……..

வயது வித்தியாசம் இல்லாமல் அல்சர் தொல்லையால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சினை அல்சரும் ஒன்றாகும்.

சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமையும் சரியான உணவுகளை எடுக்காமையும் நமது வாழக்கையில் ஒரு அங்கமாக இது மாறிவிட ஒரு காரணம் ஆகிவிட்டது.

இதனை தடுக்க இயற்கை வைத்தியமே சிறந்தது. தற்போது வயிற்றுப்புண்ணை குணமாக்கும் இயற்கை மருத்து முறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.


  1. அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.
  2. சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
  3. கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
  4. பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
  5. கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.