வலி தாங்க முடியல தாயை முடியை பிடித்து அடிக்கும் மகள்!!

699

சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி நெட்டிசன்களிடையே பரவி வருகிறது.

ஒவ்வொருவரின் கைகளிலும் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் உடனடியாக அதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர்.

சில நேரங்களில் வீடியோக்கள் மூலம் சில தவறுகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு ஆதாரமாக நின்றுவிடுகின்றன.

இதன் அடிப்படையில் தான் காவல்துறையே சில கேஸ்களை டீல் செய்கிறது. அந்த வகையான ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.

இந்த வீடியோவில் ஹரியானா மாநிலத்தில் ஒரு பெண் தன் தாயை மிகவும் கொடூரமாக அடிக்கத் தொடங்குகிறார். வலி தாங்க முடியாமல் அந்த தாய் வேண்டாம் என்னை விட்டு விடு எனக் கூறி கதறி அழுகிறார்.

இருப்பினும் அந்த மகள் ஈவு இரக்கமே இல்லாமல் தன் தாயை அடிப்பதோடு தகாத வார்த்தைகளால் பேசி விடுகிறார்.


இச்சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது சரிவர தெரியாத நிலையில் வீடியோ மட்டும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த மகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் போலீசாரை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.