வீடியோ மூலம் சிக்கிய மணமகள்… அதிரடியாக கைது செய்த போலீசார்… நடந்தது என்ன?

662

டெல்லியில்…

டெல்லியில் உள்ள சாலை ஒன்றில் திருமண உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து மணமகள் கோலத்தில் இளம் பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் மொப்பட்டில் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த வீடியோ காவல்துறையினர் கண்களில் பட்டுள்ளது. அந்த வீடியோவில் மொபட்டில் உள்ள வாகன எண்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் வாகனம் ஓட்டி அந்த பெண்ணிற்கு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய் மற்றும் உரிமை இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இது தொடர்பான துண்டு அறிக்கை விவரங்களை டெல்லி காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளனர். மேலும் அந்த ட்விட்டர் பதிவில், தயவு செய்து விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.


போக்குவரத்து விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடியுங்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், சொல்வதைக் கேட்காமல் மீண்டும் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ பதிவும், காவல்துறையினர் நடவடிக்கையும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.