வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவர்!!

488

நாமக்கல்..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 30ம் தேதி அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை கதவு தாழ்ப்பாள்போட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையடுத்து மூதாட்டியின் கூக்குரல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வருவதை அறிந்து முதியவர் உதயசூரியன் தப்பியோடினார். இதன் பின்னர் மூதாட்டியை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த நிலையில்,

மூதாட்டி கொடுத்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த உதயசூரியனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை முதியவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.