திருப்பத்தூர்..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (58). இவர் திருப்பத்தூர் பகுதியில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராமரோஜா (50). இத்தம்பதியினருக்கு புனிதா மற்றும் ஏழுமலை ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

புனிதா திருமணமாகிச் சென்ற நிலையில் ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மேலும், செல்வராஜ் திருப்பத்தூருக்கு இரவு காவலர் பணி சென்றிருந்த நிலையில் ராமரோஜா வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக இவர் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே தனியாக உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மர்ம நபர்கள் யாரோ ராமரோஜாவை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை இரும்புக் கம்பியை போட்டு இறுக்கி கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் காலையில் அக்கம் பக்கத்தினர் இறந்து கிடப்பதை அறிந்து கந்திலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ராமரோஜாவை கொலை செய்த மர்ம நபர் யார் என்றும் விசாரணை செய்து வலை வீசி தேடி வருகின்றனர். 50 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















