வீட்டை விட்டு வெளியேறிய 32 வயது கல்லூரி பேராசிரியை : சடலமாக திரும்பிய சோகம்!!

1139

தமிழகத்தில்..

தமிழகத்தில் 32 வயதான உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (35). இவருடைய மனைவி தேவிப்பிரியா (32).

இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தேவிப்பிரியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாராம். நேற்று முன்தினம் மாத்திரை சாப்பிடவில்லை எனக்கூறி தேவிப்பிரியாவை, அவருடைய கணவர் ஸ்ரீதர் திட்டியதாக கூறப்படுகிறது.


இதில் மனம் உடைந்த தேவிப்பிரியா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தேவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த பொலிசார் தேவிப்பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவிப்பிரியா தற்கொலைக்கான காரணம் உடனே தெரியாத நிலையில் விசாரணை நடந்து வருகிறது.