வெறும் 4.17 நிமிடத்தில் 150 நாடுகளின் கொடிகள், தலைநகரங்களை கூறி 5 வயது சிறுமி உலக சாதனை!

665

5 வயது சிறுமி…

வெறும் 4.17 நிமிடத்தில் 150 நாடுகளின் கொடிகள், தலைநகரங்களை கூறி 5 வயது சிறுமி உலக சாதனை.

வெறும் 4.17 நிமிடத்தில் 5 வயது சிறுமி ஒருவர் 150 நாடுகளின் கொடிகள் மற்றும் தலைநகரங்களை கூறி உலக சாதனை படைத்திருக்கிறார். ம.பி., மாநிலம் உஜ்ஜைனி நகரத்தை சேர்ந்தவர் பாரத் – சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் பிரஷா என்ற பெண் உள்ளார்.

சிறுமிக்கு கொ.ரோ.னா ஊ.ர.ட.ங்.கில் உறவினர் ‘வேர்ல்ட் புக்’ ஒன்றை கொடுத்தனர். அந்த புக்கில் இடம் பெற்ற கொடிகள் மீதான ஆர்வம் சிறுமிக்கு ஏற்படுத்தியுள்ளது.


நாடுகளின் கொடிகள், தலைநகரங்கள் குறித்து மனப்பாடம் செய்து அதனை நினைவில் பதிய வைத்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் பிரஷா சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தனர்.

அவர்கள் மேற்கொ.ண்.ட முயற்சியால், பிரஷா 150 நாடுகளின் பெயர்கள், அவற்றின் தலைநகரங்களை வெறும் 4 நிமிடம் 17 விநாடிகளில் கூறி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

இது குறித்து பிரஷா கூறுகையில், நான் பல்வேறு நாடுகளின் நாணயங்கள், மொழிகள் மற்றும் அந்நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் ஆகியோரின் பெயர்களைக் கற்றுக்கொள்வதுதான் எனது அடுத்த குறிக்கோள் என்றார்.