வெளிநாட்டில் தமிழர் கடைக்குள் புகுந்து கை வரிசையை காட்டிய மர்ம நபர்கள் : சிசிடிவியில் சிக்கிய காட்சி!!

455

பிரித்தானியா……..

பிரித்தானியாவில் கொவன்றி பகுதியில் தமிழர் ஒருவரின் கடை உடைக்கப்பட்டு பெருமளவிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாதுகப்பான இரும்புக் கதவு மூட்டப்பட்டிருந்த போதும் தமிழர் ஒருவரின் கடையை உடைத்து யாரோ இருவர் சூறையாடியுள்ளனர்.

சட்டரை வெட்டி கண்ணாடி கதவை உடைத்து உள்நுழைந்த இருவரும் இரு பெரிய கூடைகளில் சிகரெட் பெட்டிகளை நிரப்பியதோடு, லொத்தர் சீட்டுக்களையும் களவெடுத்துச் சென்றுள்ளனர்.


பெருமளவு சிகரெட் பக்கட்டுக்களும் சுமார் 5000 பவுண்ட்ஸ்களுக்கு மேலான தொகையாக இருக்கும் என காணொளியை பார்க்கும் போது தெரிகின்றது.

ஆள் நடமாட்டம் நிறைந்த சூழலில் கடை அமைந்திருந்தாலும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக இரவில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்திருப்பதும் இக்கொள்ளைக்கு ஒரு காரணி ஆகும்.