ஜான்வி கபூர்…
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்கியவர் ஸ்ரீதேவி. பொதுவாக ஒரு நடிகைக்கு ஒரு குறிப்பிட மொழியில்தான் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், ஸ்ரீதேவிக்கு 3 மொழிகளிலும் ரசிகர்கள் உருவானார்கள்.. அழகான தோற்றம், கச்சிதமான கட்டுடல், திறமையான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தார்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூருக்கு இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு மும்பையில் செட்டிலானார். இவருக்கு இரண்டு மகள்கள். அதில், மூத்தவர்தான் ஜான்வி கபூர். பெற்றோர் இருவரும் திரைத்துறையில் இருந்ததால் ஜான்விக்கும் இயலபாகவே சிறுவயது முதலே சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.
ஆனால், அதைவிட அதிக ஆர்வம் மாடலிங் துறைமீது வந்தது. மாடலிங்கில் துறையில் நுழைந்து அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். சில படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில் இவர் எடுபடவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். இவரை தமிழில் அறிமுகம் செய்து வைக்க அவரின் அப்பா போனிகபூர் திட்டமிட்டிருப்பதாக செய்திகளும் வெளியானது.
ஆனால், இப்போதுவரை அது நடக்கவில்லை. ஒருபக்கம், தழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களி்ல் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் பளபள உடையில் வாளிப்பான உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.