ஹோட்டல் ரூமில் “பிரபலமான பெண்”… ஆசை ஆசையாய் நுழைந்த இளைஞர் : பின்னர் நடந்த சம்பவம்!!

1116

டெல்லியில்..

டெல்லியில் நடந்த ஒரு மோசடி சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இப்படி ஒரு மோசடி காரியத்தில் இறங்கியது, 21 வயது இளம்பெண் என்பது கூடுதல் ஷாக்கிங் ஆக உள்ளது.

தொழில்நுட்பம் பெருக பெருக, குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.. வளர்ச்சி என்ற நோக்கில் விஞ்ஞானத்தை அணுகினாலும், அதனால் ஏற்படும் வன்முறைகளையும், தவறுகளையும் தடுக்க முடிவதில்லை.

சமீப காலமாகவே, பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து வருகிறார்கள்.. செல்போன்களை, யாராலுமே தவிர்க்க முடியாத பட்சத்தில் இதை தான் தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தி நூதன கொள்ளைகளில் இறங்கி உள்ளனர்.


சமீபத்தில்கூட, நம்முடைய டிஜிபி சைலேந்திரபாபு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.. “கடன் தருகிறோம்” என்று மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் விளம்பரம் செய்கின்றனர்.

அவர்கள் தெரிவிக்கும் ஆப்பை டவுன்லோடு செய்யும்போதே, செல்போனில் உள்ள நம்பர், உங்களின் போட்டோக்கள் உள்ளிட்ட விபரங்களை பெற்று விடுகின்றனர்…

பிறகு, கடன் வாங்கியவரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் ஆப்’பில் அனுப்பி பணம் பறிக்கிறார்கள்.. யாரிடமும் உங்களின் போட்டோக்களை பகிர வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், வடமாநிலங்களில் இந்த அக்கிரமம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மும்பையிலும் ஒரு சம்பவம் நடந்தது.. ஆனால், பணம் பறித்து மிரட்டியது ஒரு கும்பல் இல்லை, ஒரே ஒரு பெண்.. அதுவும் ஆபாசமாக திட்டி, ஆண்களை விரட்டி விரட்டி பணம் பறிப்பவர்..

57 வயது அதிகாரி ஒருவருக்கு ஆபாச வீடியோ காலில் பேச விருப்பமா? என்று கேட்க, இதை பார்த்து அந்த அதிகாரிக்கு சபலம் வந்துள்ளது.. டிரஸ் இல்லாமல், நிர்வாணமாகவே அந்த பெண் நிற்க, அதிகாரியையும் டிரஸ்களை கழற்றுமாறு சொல்ல,

இந்த அதிகாரியும் அதுபோலவே செய்துள்ளார். அவ்வளவுதான் “நாங்கள் கேட்கும் பணத்தை தந்துவிடு.. இல்லாவிட்டால், இதுவரை எடுத்த மொத்த ஆபாச வீடியோக்களையும் எல்லாருக்கும் அனுப்பி விடுவோம்” என்று அந்த பெண் மிரட்டி உள்ளார்.

பயந்துபோன அதிகாரியும், 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார்.. அந்தவகையில், இன்னொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.. இவரும் ஒரு பெண்தான்.

அதுவும் பிரபலமான பெண்.. யூடியூப் சேனல் வைத்து நடத்துகிறார்.. ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர்.. 22 வயதுதான் ஆகிறது.. அவரது பெயர் நம்ரா காதிர்.. கணவர் பெயர் மணீஷ் என்ற விராட் பெனிவால்…

நம்ரா யூ-டியூப் என்ற பெயரில் சேனல நடத்துகிறார்கள்.. இவருக்கு 6.17 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்களாம்.. இந்நிலையில், பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் யாதவ்.. ஒரு விளம்பர நிறுவன உரிமையாளரலாக உள்ளார்.

வெறும் 21 வயதுதான் ஆகிறது.. திடீரென போலீசுக்கு போய்விட்டார் தினேஷ்.. நம்ரா தன்னிடம் பறித்து விட்டதாக பரபரப்பு புகாரையும் தந்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்..

அப்போதுதான் இந்த நம்ரா யார் என்றே வெளிச்சத்துக்கு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு நம்ராவுடன் தினேஷூக்கு அறிமுகம் கிடைத்துள்ளது.. அப்போது, நம்ராவின் சேனலில் தன்னுடைய விளம்பர நிறுவனம் பற்றின விளம்பரம் வேண்டும் என்று தினேஷ் கேட்டுள்ளார்.

அதற்கு நம்ரா ரூ.2 லட்சம் தரும்படி சொல்லி உள்ளார்.. தினேஷூம் அந்த பணத்தை தந்துள்ளார்.. அதற்கு பிறகு நம்ரா ரூ.50 ஆயிரம் கேட்டு வாங்கியுள்ளார். நாளடைவில் தினேஷூக்கு பெரிய லாபம் எதுவும் வரவில்லை..

இந்நிலையில், தினேஷை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் நம்ரா சொல்லி உள்ளார்.. கடந்த ஆகஸ்டில், நம்ரா தன்னுடைய கணவர் மணீஷ் உடன் சேர்ந்து தினேஷ் கிளப் ஒன்றில் விருந்தில் பங்கேற்க சென்றுள்ளார்.

அங்கேயே ரூம் எடுத்து தங்கியுள்ளனர்… விடிகாலை தினேஷிடம், பேங்க் அக்கவுண்ட், ஏடிஎம் கார்டு, வாட்ஸ் இதெல்லாம் வேண்டும் என்று நம்ரா கேட்டாராம்..

அப்படி தராவிட்டால் போலியான பலாத்கார வழக்கு பதிவு செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார்… இதை கேட்டு தினேஷ் அதிர்ச்சி அடைந்தாலும், ரூ.80 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை தினேஷிடம் இருந்து நம்ரா பறித்துள்ளார்.

இந்த விவகாரம் தினேஷ் வீட்டுக்கு தெரிந்ததையடுத்து, போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் வந்துள்ளது.. இதையடுத்து, நம்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை வருகிற வெள்ளிக்கிழமை வரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துகின்றனர்.

தப்பியோடிய மணீஷை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு, ரூ.80 லட்சம் பணத்தையும், கிப்ட் பொருட்களையும் அபகரித்துள்ளார் அந்த பெண். அந்த 80 லட்சம் ரூபாயை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

தினேஷ் போலீசில் தந்த அந்த புகார் இணையத்தில் வெளியாகி உள்ளது. “ஒரு ஹோட்டலில் நம்ரா காதர் என்ற பெண்ணை வேலை தொடர்பாக சந்தித்தேன். அவர் ஒரு யூடியூபர், அவருடைய வீடியோவை நான் பார்த்திருக்கிறேன்.

தனது நிறுவனத்தில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு 2 லட்சம் முன்பணம் கேட்டார். ஒரே நாளில் ரூபாய் கொடுத்தேன். மேலும் ரூ. 50,000 கேட்டார். அதை நான் அவருடைய கணக்கில் போட்டேன்.

அதன் பிறகு அவர் என் வேலையைச் செய்யவில்லை. நம்ரா என்னிடம் அவர் என்னை விரும்புவதாகவும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.எனக்கும் அவரை பிடித்திருந்தது, நாங்கள் ஒன்றாகச் செல்ல சுற்ற ஆரம்பித்தோம்.

ஒரு நாள் நாங்கள் ஒரு கிளப் பார்ட்டிக்கு சென்றிருந்தபோது, ​​நம்ராவும் என்னை மது குடிக்க வற்புறுத்தினர். பிறகு, நாங்கள் 3 பேரும் ஓட்டலில் ரூம் போட்டு தூங்கினோம். காலையில் எழுந்ததும் நம்ரா என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

நான் மறுத்தால் பலாத்கார வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டினார். நான் பயந்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று வேண்டுகோள் விடுத்தேன். அப்போதும் என்னை மிரட்டினார். நான் அவருக்கு இதுவரை 70-80 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். என்னை நம்பவைத்து ஏமாற