11ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர்களால் அரங்கேறிய பயங்கரம் : தலைமறைவால் திசை மாறும் வழக்கு!!

1004

கள்ளக்குறிச்சி..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மர்மமான முறையில் 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.கீரனூர் புறவழிச்சாலை அருகே ஒருவரின் உடல் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் விசாரித்ததில் உயிரிழந்த மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு வந்ததும் தெரிய வந்தது.


இந்நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சக மாணவருடன் நேற்று மாலை மது அருந்தியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார்,

தப்பியோடிய சக மாணவரை தேடி வருகின்றனர். மாணவர் கொலைக்கு முன் விரோதமா அல்லது காதல் விவகாரமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.