11 வயசு மகளை 40 வயசு நபருக்கு திருமணம் செய்து வைத்த தாய்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

3246

பீகாரில்..

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் என்ற கிராமத்தில் மகேந்திர பாண்டே (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அந்தவகையில், மகேந்திர பாண்டே, அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை அப்பெண்ணால் திரும்ப கொடுக்க முடியவில்லை.

கடன் தொகையை பல முறைகேட்டும் தரவில்லை என்பதால் மகேந்திர பாண்டே ஒரு முடிவுக்கு வந்தார். வாங்கிய கடனுக்கு அந்த பெண்ணின் 11 வயது மகளை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மிரட்டிதால் வேறுவழியின்றி கொடுத்த கடனுக்காக 11 வயது சிறுமியை பாண்டே திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு அந்த பெண்ணும், என்ன நடக்கிறது என தெரியாத சிறுமியும் சம்மதித்து கொண்டனர்.

எனினும் கொடூரத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமியின் தாய், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து பாண்டேயை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்து.


இது குறித்து பணம் கடன்வாங்கிய பெண் கூறுகையில், என்னுடைய மகளை தன் வீட்டில் தங்க வைத்து படிக்க வைப்பதாக பாண்டே தெரிவித்தார். ஆனால் படிக்க வைத்து அவளை திருமணம் செய்து கொண்டார். என்னுடைய மகள் எனக்கு வேண்டும், என்று தெரிவித்தார். பாண்டேவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிறுமி கூறும் போது “என்னுடைய தாயார் பாண்டேயிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார். எவ்வளவு வாங்கினார் என்று தெரியாது. ஆனால் என்னுடைய தாயாரின் சம்மதத்தின் பேரில்தான் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம். எங்களை என் தாயார் சிக்க வைத்திருக்கிறார்” என கூறினார்.