
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரியும் அவரது காதலனும் கைதாகியுள்ளனர்.
கோர்பா பகுதியில் வசித்துவரும் வினாய் ஜகத் மற்றும் அவரது 16 வயது காதலி ஆகியோரே பொலிசாரால் கைதானவர்கள். சனிக்கிழமை பகல் 11 வயது சிறுமி அவரது குடியிருப்பில் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மொபைல்போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரிடை வெட்டிக்கொன்றதாக 16 வயது பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இவர்களின் பெற்றோர் வெள்ளிக்கிழமை அருகாமையில் உள்ள கிராமத்தில் திருவிழாவுக்கு சென்றதால், குடியிருப்பில் சகோதரிகள் இருவருமே இருந்துள்ளனர்.
குற்றத்தை சகோதரி ஒப்புக்கொண்ட பின்னரும் பொலிசாருக்கு சந்தேகம் இருந்து வந்தது. தொடர்ந்து குறித்த இளம்பெண் பயன்படுத்திய மொபைலை கைப்பற்றி, தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில்,

அதில், வினாய் ஜகத் என்பவருக்கு தொடர்ந்து பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
பெற்றோர் திருவிழாவுக்கு சென்றுள்ள நிலையில், காதலனை குடியிருப்புக்கு அழைத்துள்ளார் அந்த 16 வயது பெண்.

ஆனால் இருவரும் நெருக்கமாக இருப்பதை 11 வயது சிறுமி கண்டதை அடுத்து, இருவரும் இணைந்து சிறுமியை கொலை செய்துள்ளனர். பொலிசாரின் தீவிர விசாரணையின் முடிவில் காதலனை காப்பாற்ற இளம்பெண் குற்றத்தை தாமே ஒப்புக்கொண்டது அம்பலமானது.















