11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதலித்த இளைஞனால் நடந்த விபரீதம்!!

561

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த சரல் பகுதியைச் சேர்ந்தவர் அஜின். பெயிண்டிங் வேலை செய்து வரும் இவருக்கு,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறான தொலைபேசி எண் மூலம் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பழக்கமாகியுள்ளார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.


இதையடுத்து மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திய அஜின், அவருடன் நாகையில் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், தமது மகளை காணவில்லை என மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தனர்.