12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மாணவி யார் தெரியுமா?

304

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மானவி எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல, மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவிகள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு அவரது பள்ளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.