தமிழகத்தில்..

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் வசித்து வரும் உதயகுமார். பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகள் திவ்ய பிரியா .

இவர் ஓசூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திவ்ய பிரியா வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த தற்கொலை குறித்து மாணவி எழுதிய கடிதம் போலீசாரின் கையில் சிக்கியது. அதில் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் அட்டையில் பெற்றோருக்கு பதிலாக நானே கையெழுத்திட்டேன்.

இதனால் ஆசிரியர்கள் என்னை கண்டித்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர். இதை சொன்னவுடன் பெற்றோரும் என்னை கண்டித்தனர். இந்த வேதனையால் எனக்கு வாழப்பிடிக்கவில்லை. இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என உருக்கத்துடன் எழுதியிருந்தார்.















