13 வயது மல்யுத்த வீராங்கனை எடுத்த விபரீத முடிவால் கதறும் குடும்பத்தினர்.. போலீசார் தீவிர விசாரணை!!

267

கர்நாடக மாநிலத்தில்..

கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே என்ற பகுதி உள்ளது. இங்கு ஹரிஹரா என்ற நகரில் காவ்யா பூஜார் என்ற 13 வயது சிறுமி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் அவர் வீட்டின் பகுதியை அடுத்து சிறிது தூரத்தில் இருந்து காரடி மானே (Garadi Mane) என்ற பயிற்சி மையத்தில் மல்யுத்த பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் இந்த சிறுமி, விடுமுறை நாளில் மட்டுமே தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வீட்டுக்கு சென்ற சிறுமி, அவரது பெற்றோரிடம் கூட சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. பெற்றோரும் இதுகுறித்து கேட்டபோது சிறுமி எதையும் கூறாமல் தனது அறைக்குள்ளேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சிறுமி, தனியாக இருந்த நேரத்தில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி கிடந்துள்ளார்.


இதனை கண்டதும் பெரும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமி தற்கொலை குறித்த கடிதமும் கிடைக்கவில்லை. மாறாக சிறுமியின் இந்த விபரீத முடிவுக்கு காரணம், பழுசுமையாக இருக்குமா அல்லது அவரது பயிற்சி மையத்தில் யாரேனும் அவருக்கு தொல்லை கொடுத்தனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் இந்த சிறுமி மாவாட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.