இன்றைய ராசிபலன் (24.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1124

இன்றைய ராசிபலன்……

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிப்பார்கள். ஆகவே சிரமப்பட்டு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் சில விஷயங்களில் தடுமாற்றம் ஏற்படும்.

ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வீண் சிலவை கொஞ்சம் குறைக்க வேண்டும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களை நம்பி கடனாக பணம் கொடுக்காதீங்க. பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் எந்த பண வர்த்தனையும் செய்யக்கூடாது. நம்பிக்கையின் பேரில் நீங்கள் செய்யும் உதவி ஏமாற்றப்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப செலவு ஏற்படும். பண வரவுக்கு. இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாள் கோவிலுக்கு சென்று குடும்பத்தோடு தரிசனம் செய்தால் நன்மை நடக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். அடுத்தடுத்து வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே யூகித்து விடுவீர்கள். பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சமோயோஜித புத்தி உதவியாக இருக்கும். திறமை வெளிப்படக்கூடிய நாள் இது.

சிம்மம்:

சிம்மராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். என்றோ செய்த முதலீட்டில் இன்றைக்கு லாபத்தை பெறுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினை இன்று ஒரு முடிவுக்கு வரும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்‌. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக அமையும். ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டு பெண்களுக்கு உடல் அசதி ஏற்பட்டாலும் வேலையை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைபேசியின் மூலம் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. சொந்தத்தொழிலில் அக்கறையோடு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காணலாம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. எதிர் பாலின நட்பு பிரச்சனையை உண்டு பண்ணிவிடும். எதிரிகள் சூழ்ச்சியால் வேலை செய்யும் இடத்தில் சில பின்னடைவுகள் ஏற்படும். நண்பர்கள் தானே என்று யாரையும் குறைத்து எடை போடாதீங்க.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பிடிவாத குணம் வெளிப்படும். எல்லாரிடமும் கெட்ட பெயர் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் பணிவாக பேசவும். சொந்த தொழிலில் சக ஊழியர்களை மதித்து நடக்கவும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இன்று அவர்களுடைய வேலையை சாமர்த்தியமாக முடித்து காட்டுவார்கள். சிக்கல் நிறைந்த பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து நழுவி விடுவீர்கள். எதிரிகளை சுலபமாக வெல்லக்கூடிய தந்திர வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். இன்றைக்கு உங்களுடைய கில்லாடித்தனம் உங்களை காப்பாற்றி விடும் கவலையே படாதீங்க.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுடைய ஆதரவு கிடைக்கும். பிரச்சனை என்று வந்தால் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை தூக்கி விட காத்துக் கொண்டிருப்பார்கள். மனதில் ஒரு தன்னம்பிக்கை யோடு வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலை வேலைக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் மனைவியின் ஆதரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். அது மனநிறைவையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.