14 வயது மகனுக்கு வந்த பார்சல்: திறந்த பார்த்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

615

14 வயது மகனுக்கு வந்த பார்சல்…

பெங்களூருவில் தன்னுடைய மகனுக்கு வந்த பார்சலில் கஞ்சா இருப்பதை பார்த்த தந்தை பொலிசில் புகாரளித்துள்ளார். பெங்களூரூவில் உள்ள சதாசிவ நகரை சேர்ந்த 45 வயது தொழிலதிபர் ஒருவருக்கு 9வது படிக்கும் மகன் ஒருவர் உள்ளார்.

சம்பவ தினத்தன்று மகனுடைய பெயருக்கு கொரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. மகன் அந்நேரம் வீட்டில் இல்லாததால் பார்சலை திறந்து பார்த்துள்ளார், அதில் அடர்பழுப்பு நிறத்தில் பொடி ஒன்று இருந்துள்ளது.

அது என்னவென்று தெரியாமல் குறித்த தொழிலதிபர் நண்பரிடம் விசாரிக்க, கஞ்சா பொடி என்பது தெரியவந்தது.


இதனையடுத்து அந்த பார்சலை அனுப்பியது யார் என விசாரிக்க முடியாமல் போகவே பொலிசில் புகாரளித்தார்.

பின்னர் விசாரணையில் அந்த பார்சல் எம்ஜி ரோட்டிலிருந்து தீரஜ் குமார் என்பவரால் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தீரஜை கைது செய்து விசாரணை நடத்தி பொலிசார் முயன்று வருகிறார்கள்.