150கிலோ தலைமுடியை மட்டுமே திருடிச் சென்ற மர்மகும்பல் : ரூ7,00,000/- மதிப்பாம்!!

286

ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் மண்டேல் . இவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதற்காக தன்னுடைய வீட்டில் பெண்களின் தலைமுடியை அதிக அளவில் வாங்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை நேரத்தில் திடீரென ரஞ்சித் வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.

இந்த மர்ம கும்பல் அவர்கள் வீட்டில் இருந்த 150 கிலோ எடை கொண்ட தலைமுடியை திருடி சென்றது. இவற்றின் மதிப்பு ரூ 7,00,000 என்கிறார் ரஞ்சித். அத்துடன் ரூ 2 லட்சம் ரொக்க பணத்தையும் திருடிவிட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பக்கத்துக் கடையிலிருந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோதுதான் விஷயம் தெரிய வந்தது.இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அடிப்படையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.