மதுரை..

மதுரை மாவட்டம் திருமங்கலம் கூடக்கோவில் சாலையில் உள்ள கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில்,

முதியவரின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். ஆண் வாரிசு இல்லாத முதியவர் ஏற்கனவே மனைவியும்,

இறந்து விட்டதால் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என முடிவு செய்தார். எனவே வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது மூத்த மகளிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு மூத்த மகள் வேறு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக தனது (16 வயது) மகளை திருமணம் செய்துகொள்ளலாம் என தனது தந்தையிடம் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரின் சம்மதத்துடன் திருமணம் நடத்த ஏற்பாடும் செய்தனர்.இந்நிலையில், தாத்தாவை தனக்கு திருமணம் செய்ய முயற்சி செய்வதை அறிந்த சிறுமி அதிர்ச்சியடைந்தார்.

இதனால் தனது தாயின் தங்கை கணவரிடம் (சித்தப்பா) இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதற்கு சிறுமியின் சித்தப்பா உன்னை நான் காப்பாற்றுகிறேன் என கூறி சிறுமியிடம் அடிக்கடி அன்பாக பேசி பழகி வந்துள்ளார்.















