17 வயதுச் சிறுவனுடன் 30 வயதுப் பெண் திருமணத்தை மீறிய உறவு…திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

17717

உத்தரப்பிரதேசம்..

உத்தரப்பிரதேச மாநிலம், சாஜஹான்பூர் பகுதியில் வசிப்பவர் மொஹமத் உஸ்மான். இவரின் மகன் 17 வயதான சிறுவன், டெய்லர் வேலை செய்துவந்தான்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இந்தச் சிறுவனுக்கு, வேலை செய்த கடைக்கு அருகில் வசிக்கும் 30 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.ஆரம்பத்தில் இருவருக்கும் சாதாரணமான பழக்கம்தான் இருந்தது. அதுவே நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியது.

இவர்களின் உறவு குறித்து 30 வயது பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து இந்த உறவுக்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


சிறுவனுடன் தொடர்பிலிருந்த பெண்ணுக்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்பைக் கைவிடும்படி அந்தப் பெண்ணிடம் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

வீட்டில் நிர்பந்தம் அதிகரித்ததால், அந்தச் சிறுவனிடம் அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், சிறுவனான அவர், திருமணம் செய்ய மறுத்தார்.

எனவே சிறுவன்மீது பொய் வழக்கு பதிவு செய்வேன் என்று அந்தப் பெண் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சிறுவன் தனது தோட்டத்துக்குச் சென்று தற்கொலை செய்துகொள்வதற்காக பூச்சிமருந்தைக் குடித்துவிட்டார்.

உடனே அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் 30 வயது பெண் சிறுவனிடம் திருமணம் செய்துகொள்ளும்படி நிர்பந்தம் செய்தது தெரியவந்தது.

அதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இதையடுத்து சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பெண்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்