17 வயது சிறுவன் படுகொலை : இளம்பெண் தாதாவுடன் கைதான 7 சிறுவர்கள்!!

201

இந்தியாவின் டெல்லியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் தாதா மற்றும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் ஜிக்ரா என்ற இளம்பெண், 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்துக் கொண்டு தாதாவாக செயல்பட்டு வந்திருக்கிறார்.

இவரது உறவினர் சாஹில் என்பவரை கொலை செய்ய 2023ஆம் ஆண்டில் முயற்சி நடந்துள்ளது. அதில் அவர் உயிர்தப்பிக்க, குணால் என்பவர்தான் இதற்கு காரணம் என ஜிக்ரா நினைத்துள்ளார்.

தனது உறவினரை கொலை செய்ய முயற்சித்தவரை பழிவாங்க எண்ணிய அவர், தன்னிடம் இருக்கும் சிறுவர்களை வைத்து குணாலை கொலை செய்திருக்கிறார்.

இதனையடுத்து ஜாக்ரா, சாஹில் மற்றும் தில்ஷாத் ஆகியோருடன் 7 சிறுவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.