19 இளம் பெண்ணுக்கு உணவே விஷமான கொடூரம்.. இதையெல்லாம் தொடர்ந்து சாப்பிடாதீங்க மக்களே!!

150

வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறி வரும் சூழலில் பலரும் உயிரை வளர்க்கும் உணவுக்கு அதிகளவில் முக்கியத்துவம் தராமல் விதவிதமான சுவைகளுக்கும், கவர்ந்திழுக்கும் வண்ணத்திற்கும் இன்ஸ்டண்ட் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

நொறுங்க தின்றால் நூறு வயது என்றார்கள். பரோட்டா, பாஸ்ட்புட் உணவு வகைகள், சிக்கன் ப்ரை, பார்ப்பிக்யூ, ஷவர்மா என்று கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.

அதிலும் இப்போதெல்லாம் சிறுவர்களையும் ஸ்டைலாக ப்ரைட் ரைஸ் என்று சொல்லும்படியாக பழக்கி வைத்திருக்கிறோம். இதில் உயிருக்கு உலை வைக்கும் அடுத்த உணவகாக நூடுல்ஸ் சிரிக்கிறது.

இப்படி தொடர்ந்து பாஸ்ட் புட் உணவகம் ஒன்றில் நூடுல்ஸ், பிரைடு ரைஸ் சாப்பிட்டு வந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் அந்தோணியார் தெருவில் வசித்து வருபவர் அருண் (வயது 22). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அருள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புனித பியூலா (18) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார்.

இந்த தம்பதிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் அருண் கடந்த 6 மாதங்களாக இரவு நேரத்தில் தனது மனைவிக்கு நூடுல்ஸ் மற்றும் பிரைடு ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார்.


இதற்கிடையில், பியூலா சமீபகாலமாக தொடர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பியூலா கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் கோமா நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

பியூலாவின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்துப் பார்த்த போது, ​​பியூலாவின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

தினமும் துரித உணவை சாப்பிட்டதால், கல்லீரல் நேரடியாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 7 மாத கைக்குழந்தை தனது தாயை ஏக்கமாக தேடி வருகிறது. ரொம்பவே கவனமாக இருங்க மக்களே… நமது உணவு முறைகள் குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய காலம் இது.