திருவண்ணாமலை..

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரணமல்லூர் அருகே உள்ளது கடுகனூர் கிராமம். இக் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமி காந்தன். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.

கடந்த வாரத்தில் லட்சுமிகாந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் வீட்டை விட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வெளியே சென்று இருக்கிறார் லட்சுமி காந்தன்.

அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீஸ்க்கு தகவல் சொல்ல, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், முட்புதரில் லட்சுமி காந்தன் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் செய்யார் போலீஸ்.

இது குறித்து போலீசாரின் விசாரணையில் ராஜேஸ்வரிக்கு திருமணத்திற்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் உடன் பழக்கம் இருந்திருக்கிறது. லட்சுமி காந்தனை திருமணம் செய்த பின்னரும் சிவகுமார் உடன் கள்ள உறவில் இருந்து வந்திருக்கிறார்.

செய்யாறு ஷூ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் ராஜேஸ்வரி. அங்கு சூப்பர்வைசராக இருக்கும் உதயசூரியன் என்பவருடன் கள்ள உறவு இருந்திருக்கிறது. ராஜேஸ்வரி இதனால் சிவகுமாருடன் பழகுவதை நிறுத்தி இருக்கிறார்.

சிவகுமார், நான் தான் ராஜேஸ்வரியின் கணவர் என்று சொல்லி வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று பிரச்சனை செய்திருக்கிறார். இதனால் இந்த நிர்வாகம் ராஜேஸ்வரி வேலையை விட்டு நிறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தான் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி உதயசூரியனிடம் வற்புறுத்தி இருக்கிறார் ராஜேஸ்வரி. கணவனை தீர்த்து கட்டிவிட்டு அதன் பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி லட்சுமி காந்தனை மது அருந்த வயல் வெளிக்கு அழைத்துச் சென்று அங்கு போதையில் இருந்தபோது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் கழுத்தை அறுத்து உடலை அருகே இருந்த முட்புதரில் விசிவிட்டு சென்றிருக்கிறார். போலீசாரின் விசாரணையில் கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் போலீசார்.















