2வது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கொடூர கணவன் : தலையை தேடும் போலீஸ்!!

570

ஜார்கண்டில்..

 ஜார்கண்டில் 22 வயது நிரம்பிய மனைவியை கொலை செய்து 12 துண்டுகளாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க அவர் மனைவியின் உடல் துண்டுகளை ஆங்காங்கே வீசிய நிலையில் நாய் கவ்வி வந்ததால் சிக்கினார்.

டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தா வால்கரை, அப்தாப் அமீன் கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையை உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து கொலையை மறைக்க உடலை பல துண்டுகளாக வெட்டும் சம்பவம் ஆங்காங்கே நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

டெல்லியை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த நிலையில் தற்போது ஜார்க்கண்டில் நடந்துள்ளது. வெறும 22 வயது நிரம்பிய 2வது மனைவியை கணவரே கொலை செய்து உடலை 12 துண்டுகளாக வெட்டிய கொடூர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:


Suryakumar Yadav-ஐ பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த Shreyas Iyer
ஷ்ரத்தாவை போல்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பியூட்டிஷியன் கொடூர கொலை.. காதலனால் ஷாக்கில் பெங்களூர் ஷ்ரத்தாவை போல்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பியூட்டிஷியன் கொடூர கொலை.. காதலனால் ஷாக்கில் பெங்களூர்

ஜார்க்கண்ட் மாநிலம் போரியா போலீஸ் எல்லைக்குட்பட்ப சாகிப்காஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தில்தார் அன்சாரி. திருமணம் ஆனவர். இந்நிலையில் தான் தில்தார் அன்சாரிக்கும், சாகிப்காஞ்ச் பகுதியில் வசித்து வந்த பழங்குடியினத்தை சேர்ந்த 22 வயது நிரம்பிய ரூபிகா பகதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது. இதையடுத்து தில்சார் அன்சாரி, ரூபிகாவை 2வது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக ரூபிகா வீட்டில் இருந்து மாயமானார். இதுபற்றி தில்சார் அன்சாரி அவரது குடும்பத்தினரிடம் கூறினார். இதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பல இடங்களில் ரூபிகாவை போலீசார் தேடினர். மேலும் உறவினர்களிடமும், குடும்பத்தினரிடமும் விசாரித்தனர்.

இந்நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில் நாய் ஒன்று உடல் துண்டுகளை கவ்வி எடுத்து வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அந்த உடல் துண்டை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அது மாயமான ரூபிகாவின் உடலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த வேளையில் தில்கார் அன்சாரியின் வீட்டு சமையலறையில் ரத்தக்கறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தில்கார் அன்சாரி மீதான சந்தேகம் வலுத்தது.

அவர் தான் ரூபிகாவை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இதனால் தில்கார் அன்சாரியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.

அதாவது தனது 2வது மனைவியை கொலை செய்த தில்கார் அன்சார், அதன்பிறகு எலக்ட்ரிக் கட்டர் கொண்டு அவரது உடலை 12 துண்டுகளாக வெட்டினார். பிறகு கொலையை மறைக்க சாந்தாலி மொமின் தோளா பகுதியில் உள்ள பழைய வீட்டுக்குள் உடலை வைத்தார்.

அவ்வப்போது உடல் துண்டுகளை ஆங்காங்கே வீசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வெளியே வீசப்பட்ட உடல் துண்டை நாய் கவ்வி வந்த நிலையில் அவர் போலீசில் சிக்கியது தெரியவந்துள்ளது.

இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தெரிவிக்கவில்லை. ரூபிகாவின் சில உடல் துண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இன்னும் சில பகுதிகள் கிடைக்கவில்லை. அதனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.