2 குழந்தைகள் கொண்ட விதவை பெண்ணை மணந்து கொண்ட நபர்! மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

956

தமிழகத்தில்……….

தமிழகத்தில் காவலரான தனது கணவர் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக மனைவி புகார் கொடுத்துள்ளார்.

அம்பத்தூரை அடுத்து பாடியைச் சேர்ந்த சுமலதா, தனது முதல் கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே வடபழனியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு, எஸ்.பி.சி.ஐ.டி. காவலரான செல்வகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் கடந்தாண்டு நவம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்தநிலையில் அண்மையில் தனது இரண்டாவது கணவரின் செல்போனை பார்த்த அவர், அதில் பல பெண்களுடன் செல்வகுமார் நெருங்கிய தொடர்பில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


இதனைதொடர்ந்து அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சுமலதா புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் செல்வகுமார் வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவலர் மீது அவர் மனைவி புகார் கொடுத்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.