+2 மாணவியுடன் உல்லாசம்… மாணவிகளை ஏமாற்றிய திருமணமான நபர் : அதிரவைக்கும் தகவல்!!

1192

கள்ளக்குறிச்சி..

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்பரசன்(27), அரசு பள்ளியில் ப்ளஸ்2 படித்து வந்த 17 வயது மாணவியின் செல்போன் எண் கிடைத்ததன் மூலமாக மிஸ்டு கால் கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் மறுமுனையில் மாணவி தொடர்பு கொண்டு அன்பரசனிடம் பேசினார். எதிர் முனையில் அன்பரசன் இனிமையான குரலில் பேசி மாணவியை மயக்கியுள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி நட்பாக செல்போனில் பேசி வந்துள்ளனர்.

பின்னர் மாணவியிடம் காதல் வலை வீசி அன்பரசன் பேசியுள்ளார். இருவரும் அடிக்கடி பள்ளி விட்டு செல்லும் போது வழியில், ஹோட்டலில் என சந்தித்து பழகி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் யாரும் இல்லாத போது, அன்பரசனை வீட்டிற்கு அழைத்துள்ளார் மாணவி.


தான் செல்போனில் பேசும் போது சொன்ன, மாடித்தோட்டம், தனது செல்ல நாய்க்குட்டி என குழந்தை மனசுடன் இவற்றைக் காண்பிக்க ஆசையாசையாய் அழைத்துள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார் அன்பரசன்.

அதன் பிறகு இருவருக்கும் நெருக்கம் அதிகரித்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில்,

நேற்று முன்தினம் மாணவியின் வீட்டின் பின்புறம் நின்று கொண்டு, மாணவியிடம் அன்பரசன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை மாணவியின் பெற்றோர் பார்த்து விட்டனர். இவர்களை கண்டதும் அன்பரசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் மகளிடம் விசாரித்த போது அவரை காதலிப்பதாகவும், ஒன்றாக இருந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அன்பரசன் குறித்து விசாரித்த போது, அன்பரசனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதும், இதை மறைத்து மாணவியுடன் பேசி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், ஏற்கெனவே அன்பரசன் திருமணமானதை மறைத்து, இப்படி பள்ளி மாணவிகளுக்கு காதல் பெயரில் அன்பாக பேசி, பாலியல் ரீதியில் உறவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. பள்ளி மாணவிகள் தான் அன்பரசனின் டார்க்கெட்டாக இருந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.