2 மாதத்தில் கசந்து போன திருமண வாழ்க்கை.. ஆத்திரத்தில் புதுப்பெண்ணை கதறவிட்ட கணவர்!!

733

கடலூரில்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மகன் சிலம்பரசன் (29). இவருக்கும் சீர்காழி அடுத்த அரசூரை சேர்ந்த ரோஜா (25) என்ற பட்டதாரி பெண்ணுடன் கடந்த மே 4-ம் தேதியன்று சிதம்பரத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணமான அன்று முதலே கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல நேற்று இரவும் ரோஜாவுக்கும், சிலம்பரசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது கையில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரோஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.


இந்த சம்பவம் பற்றி அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.