20 பவுண் தங்கத்தில் திருமண ஆடை, புர்ஜ் கலிஃபாவில் திருமணம் செய்த அந்த இந்திய ஜோடி யார் தெரியுமா?

375

இந்திய ஜோடி ஒன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் பல கோடிகள் செலவழித்து திருமணத்தை செய்துள்ளனர்.

இந்தியாவிலும் சரி பல நாடுகளிலும் சரி பலரும் பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொள்வது வழக்கம்.

அரண்மனைகள் முதல் ஆடம்பரமான விருந்துகள் வரை செழுமை நிறைந்த திருவிழா போன்று பல திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் துபாயில் இந்திய ஜோடி ஒன்று திருமணம் செய்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மற்றும் மகன் ஆகாஷ் அம்பானிக்கு நிகழ்ந்த திருமணத்தை விட இந்த திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இத்திருமணமானது புர்ஜ் கலீஃபா, புர்ஜ் அல் அரப் ஜுமேரா மற்றும் பலாஸ்ஸோ வெர்சேஸ் துபாய் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.

திருமண நிகழ்வுக்காக ஹெலிகாப்டரையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். நிச்சயதார்த்தம் அன்று மணமகளுக்கு 12 காரட் வைர மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது. அதுப்போலவே மணமகனுக்கு 6 காரட் வைர மோதிரமும் அணிவிக்கப்பட்டுள்ளது.


மணமகள் அமேதிஸ்ட், மாணிக்கங்கள் மற்றும் வைரங்கள் போன்ற விலைமதிப்பற்ற நகைகளைக் கொண்ட 22 காரட் தங்க கிரீடத்தையும் அணிந்துள்ளார்.

திருமணத்திற்காக 120 காரட் போல்கி நெக்லஸுடன் தோராயமாக 20 பவுண்டு ஆடையும் மணமகள் அணிந்துள்ளார். மேலும் இந்த திருமணமானது தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.