20 லட்சத்துக்காக பெண் படுகொலை.. கணவனே கொன்ற கொடூரம்!!

540

கிருஷ்ணகிரி….

கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை(44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கவுரி(41). இவர்களுக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

விஜி ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சின்னத்துரை – கவுரி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அங்கு வாங்கியிருந்த நிலத்தை விற்று விட்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளியில் இடம் ஒன்றை வாங்கியுள்ளனர். மீதி பணத்தை கணவர், மனைவி 2 பேர் பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்தனர்.


இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இருந்த பிரச்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுரி கிருஷ்ணகிரி அருகே மேலேரிகொட்டாயில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை அம்மன் நகர் வீட்டில் கவுரி கழுத்து, வாய் மற்றும் கைகளில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி துணை காவல் கண்கானிப்பாளர் தமிழரசி மற்றும் ஆய்வாளர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் கவுரியின் கணவன் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் மற்றும் காலனி இருந்ததால் குடும்ப தகராறில் கணவனே மனைவியை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தலைமறைவாக உள்ள சின்னதுரையை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் குடும்பத்தகராறில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.