3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி.. மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

644

திண்டுக்கல்..

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகா ஜோதி. 19 வயது இளம்பெண் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சக்தி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார் .

 கடந்த 21ஆம் தேதி என்று இவர் கல்லூரியின் மூணாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதை அடுத்து அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

அங்கு அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . ஆறு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


இதன் பின்னர் அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்களுக்கு சொல்லி உடலை வாங்க மறுத்தனர் .

மாணவியின் மரண மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவியுடன் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தவர் மருத்துவமனையிலும் கல்லூரியிலும் பல போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .

இந்நிலையில் மாணவி உடலை மனைவி வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதா போலீசு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.