3 நாட்களாக லிப்ட்டில் சிக்கிய இளம்பெண் : லிப்ட்டின் கதவை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

552

உஸ்பெகிஸ்தான்….

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தில் வசித்து வரும் ஓல்கா லியோன்டிவா ஜூலை 24 ம் தேதி காணாமல் போயுள்ளார். வழக்கம் போல் காலை பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீசாரிடம் தகவல் அளித்தனர். 3 நாட்களுக்கு பின்னர் லிப்டில் லியோன்டிவா சடலமாக மீட்கப்பட்டார். ஜூலை 24 ம் தேதியன்று லியோன்டிவா பணிமுடிந்து 9 மாடி கட்டிடத்தில் உள்ள லிப்ட்டில் ஏறியுள்ளார்.

எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்ட் பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்குள் சிக்கிய லியோன்டிவா கத்தி கூச்சலிட்டுள்ளார். அவருடைய சத்தம் வெளியில் இருந்தயாருக்கும் கேட்கவில்லை.


இதனால் அவருக்கு உதவி கிடைக்காததால் லிப்ட்டிற்குள் லியோண்டிவா மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் லிப்டுக்கு உள்ளேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இச்சம்பவம் குறித்து சீனா லிப்ட் நிறுவனத்தின் மீது போலீஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காலையில் பணிக்கு சென்ற பெண் லிப்ட்டிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.