அமெரிக்காவில்………

அமெரிக்காவில் முதன்முறையாக இரண்டு மிருகக்காட்சி சாலைகளில் இருந்த 3 பனிச் சிறுத்தைகளுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெண்டக்கி மற்றும் லூயிஸ்வில் மிருகக் காட்சி சாலையைச் சேர்ந்த 2 பனிச் சிறுத்தைகளுக்கு சுவாச நோயின் அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து சிறுத்தைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளதாக தேசிய கால்நடை சேவை ஆய்வகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தொற்று அறிகுறியற்ற ஊழியரால் 3 பனிச்சிறுத்தைகளுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என மிருகக்காட்சி சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்















