3 மனைவி… 4 குழந்தைகள்! இளம் பெண்ணை பேஸ்புக்கில் பேசி மயக்கி கடத்தி சென்ற 42 வயது நபரைப் பற்றி திடுக்கிடும் தகவல்!!

637

இந்தியா…….

இந்தியாவில் காணமல் போன இளம் பெண் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் கடந்த 3-ஆம் திகதி இளம் பெண் ஒருவர் காணமல் போயுள்ளார். இதனால் அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார், பல குழுக்களாக பிரிந்து காணமல் போன பெண்ணை தேடி வந்துள்ளனர்.

அப்போது விசாரணையில் குறித்த பெண் அப்துல்லா என்பவருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்துல்லா என்ற நபருக்கு 42 வயது எனவும், மீரட்டை சேர்ந்த இவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் நான்கு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

மேலும், அவர் பேஸ்புக்கில் அமன் சவுத்ரி என்ற பெயரில் புதிய கணக்கை துவங்கி, தன்னுடைய வயதைக் குறைத்துக் காண்பிப்பதற்காக விக் வைத்து புகைப்படங்கள் பதிவிட்டு வந்துள்ளார்.


அப்போது தான் காணமல் போன இளம் பெண்ணுக்கு அப்துல்லா அறிமுகமாகியுள்ளார்.

அதன் பின், குறித்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண்ணை மீட்ட பொலிசார், பெற்றோரிடம் ஒப்படைத்து அப்துல்லாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.