3 வருடத்திற்கு பின் மனைவிக்கு கணவன் கொடுத்த கிஃட்… ஆனந்த கண்ணீரில் மனைவி : வைரல் வீடியோ!!

562

திருமணப் பரிசு…

திருமணம் சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வலம் வருகின்றன. அதிலும், திருமணத்தில் ஏற்படும் அசாம்பாவிதம் சார்ந்த விஷயங்கள் தான் அதிகம்.

அந்த வகையில், தன் மனைவிக்காக கணவர் ஒருவர் செய்திருக்கும் விஷயம் தான் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

அதாவது, திருமண நாளுக்காக மனைவிக்கு அவர் கொடுத்த சர்ப்ரைசில் மனைவி ஆனந்தக் கண்ணீரில் நனைந்திருக்கிறார்.


கணவர் கென் 3 வருடங்களாக மனைவிக்குத் தெரியாமல் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்.

மேலும், தனது திருமண நாளன்று அந்த வீட்டுக்குத் தன் மனைவியை சர்ப்ரைசாக அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த வீட்டை தன் மனைவிக்கான திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார். பின், அந்த வீட்டுக்குத் தன் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்திய வீடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இவரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.