3 தமிழ் பெண்கள் கேரளா சென்று செய்துவந்த மோசமான செயல் : இறுதியில் நடந்த பரிதாபம்!!

436

கேரளா…

கேரளாவின் கொச்சியில் பொது இடங்களில் மயக்கம் வருவது போல் நடித்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த தேவி (39), சாந்தி (27), அனு (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மூவரும் மிக நூதனமாக திருட்டுகளை திட்டமிட்டனர். பெரும்பாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2 பவன் நகையையும், பஸ் பயணியிடம் 4 பவன் நகையையும் திருடியுள்ளனர்.

பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனைக்கு வந்த, இந்த கும்பல், நோயாளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு சென்று மயக்கம் வருவது போல் கீழே விழுந்து நடித்துள்ளனர்.


அதை பார்த்து உதவி செய்ய முன்வரும் மக்கள் கூட்டத்தில் புகுந்து இக்கும்பலைச் சேர்ந்த மற்றொரு பெண் நகையை பறித்துக் கொண்டு ஓடிவது வழக்கம். பேருந்துகளிலும் இதே போல் நகையை திருடியுள்ளனர்.

இவர்கள் மூவரும் ஒரு புதிய சதித்திட்டம் தீட்டிய போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாந்தி கடந்த மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.