3 பேர் காதலித்தார்கள்… என் குழந்தைக்கு தந்தை யார்? காவல் நிலையத்தில் இளம் பெண் கண்ணீர்!!

900

தூத்துக்குடி..

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் மகளிர் காவல்நிலையத்திற்கு கையில் பச்சிளம் பெண் குழந்தையுடன் இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகார் அளித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனக்கு ராங் கால் ஒன்று வந்ததாகவும், அதில் பேசிய இசக்கி முத்து என்பவருடன் தனக்கு காதல் மலர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் இசக்கி முத்து தன்னை பிரிந்து சென்றுவிட்டதாகவும் பிறகு அவருடைய நண்பருடன் காதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த நபரும் தன்னுடன் நெருக்கமாக பழகிவிட்டு பின்னர் தன்னை கைவிட்டதாக கூறியுள்ளார் அந்த பெண்.


பின்னர் மூன்றாவதாக இளைஞர் ஒருவரை நம்பி பழகி அவராலும் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார் இந்த இளம் பெண். இதனிடையே முதல் இரண்டு காதலர்களான இசக்கி முத்துவும் அவருடைய நண்பரும் மீண்டும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் மூன்று பேரை காதலித்து வந்த அந்த இளம் பெண் கரர்ப்பமாகியிருக்கிறார்.

இதனை தனது காதலர்களுக்கு தெரிவித்ததும், குழந்தைக்கு தாங்கள் தகப்பன் இல்லை என கூறி அவர்கள் ஓட்டம் பிடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பே 3 பேருடன் பழகி கர்ப்பமானதால் அவமானம் தாங்காமல் அந்த பெண்ணின் தாய் உயிரிழந்துவிட்டாராம். ஏழ்மை நிலையில் உள்ள அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த தகவலை கூறியும் 3 பேரும் தங்களின் குழந்தை இல்லை என கைவிரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். வயதான தனது தந்தையால் வேலைக்கு போக முடியாததால் குழந்தைக்கு சட்டை துணி பால் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீர்மல்க கூறியுள்ளார் அந்த பெண்,

பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி யோகேஸ்வரன் குழந்தைக்கு அப்பா யார் என்ற விசாரணையை தொடங்கியுள்ளார்.

மேலும் குழந்தைக்கு புதுத்துணி பால் உள்ளிட்டவற்றை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குழந்தைக்கு புதுசட்டை போட்டு அலங்காரம் செய்து கொஞ்சி மகிழ்ந்து வருகின்றனர் பெண் காவலர்கள்.