40 வயது பெண்ணுடன் உல்லாசம்.. காசு கேட்டதால் அடித்தே கொன்ற கொடூரம்.. சிக்கிய இளைஞர்கள்!!

723

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த குண்டியல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா(40). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குண்டியல்நத்தம் வனப்பகுதியில் பிணமாக கிடந்துள்ளார்.

இதில் அம்பிகாவின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது மகள் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு வந்த பர்கூர் போலீசார் அம்பிகாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது அம்பிகாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் உடைந்த நிலையில் கிடைத்தது.

அந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்தனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் செல்போனில் கடைசியாக பேசியுள்ளது தெரியவந்தது.


இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பர்கூர் போலீசார் ஏழுமலையை தேடி வந்த நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ஏழுமலையை கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.அதில் ஏழுமலையும்,அம்பிகாவும் பலமுறை தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததுள்ளனர். உல்லாசமாக இருந்தற்கு ஏழுமலை அம்பிகாவிற்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை ஏழுமலை அவரது நண்பர்களான கோவிந்தராஜ் மற்றும் 17வயது சிறுவன் ஒருவன் ஆகிய இருவருடனும் உல்லாசமாக இருந்தால் பணம் தருவதாகவும் குண்டியல்நத்தம் வனப்பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அம்பிகா தனக்கு மது வேண்டும் என வாங்கி வர சொல்லியுள்ளார்.

பின்னர் நான்கு பேரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அம்பிகாவுடன் ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் மாலை வீட்டிற்கு செல்லும் போது அம்பிகா பணம் கேட்டுள்ளார்.

அதற்கு பணம் இல்லை என ஏழுமலை கூறவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த அம்பிகா ஏழுமலையின் செல்போனை பிடுங்கிக்கொண்டு பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதில் மதுபோதையில் ஏழுமலை அவரது நண்பர்கள் மூவரும் சேர்ந்து அம்பிகாவை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அம்பிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் அம்பிகாவின் உடலை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் தலைமறைவாக இருந்த ஏழுமலையின் நண்பர்கள் ராகுல்,கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.