5 ஆண்களை ஏமாற்றி திருமணம்.. 6வது கணவருடன் உல்லாச வாழ்க்கை : பெண்ணின் லீலைகள் அம்பலம்!!

2270

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் (29). விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்.

பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசத் தொடங்கினர். அப்போது மகாலட்சுமி, சுடிதார் அணிந்து, தோளில் ஒரு பேக் மாட்டியபடிபோஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை மணிகண்டனுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது அழகில் மணிகண்டன் மயங்கினார். இவர்களின் நட்பு பின்னாளில் காதலாக மலர்ந்தது. அப்போது திருமணத்திற்கு தனது தரப்பில் யாரும் வரப்போவதில்லை, தான் மட்டுமே வீட்டைவிட்டு வருவதாக மகாலட்சுமி தெரிவித்தார்.

இதையடுத்து கடந்தாண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி இவர்களின் திருமணம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோயிலில் நடைபெற்றது. இதில் மணிகண்டன் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


திருமணத்தின்போது. மணிகண்டன் வீட்டினர் மகாலட்சுமிக்கு 8 பவுனில் நகை போட்டனர். இந்நிலையில் சில நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு, வீட்டில் சொத்து பிரச்னை உள்ளதாக எனக்கு போன் வந்தது. எனவே நான் ஊருக்கு செல்லவேண்டும் என்று மகாலட்சுமி தெரிவித்தார்.

காதல் மனைவியின் பேச்சை உண்மை என்று நம்பிய மணிகண்டனும் அவரை வழியனுப்பி வைத்தார். ஆனால், திரும்பி வருவதாக கூறிவிட்டுச்சென்ற காதல் மனைவி திரும்பவில்லை. போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

இந்நிலையில், வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்தையும் காணவில்லை. இதன் பின்னர் தான் மணிகண்டன் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து ஒருநாள் மகாலட்சுமிக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்து பேசிய அவர், சரியான பதிலை அளிக்கவில்லை.

நகை மற்றும் பணம் குறித்து கேட்டபோது தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்துவிடுவேன் என்று போனில் மிரட்டலும் விடுத்துள்ளார். இதில் அதிர்ந்த மணிகண்டன் குடும்பத்தினர் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, மகாலட்சுமியின் புகைப்படம், முகநூல் பக்க பதிவுகள், அவரது செல்போன் எண் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர்.

அதில், அவர் சேலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று மகலாட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 5வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர்தான் மணிகண்டன். ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். அபகரித்த செல் நகை, பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, மனதுக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளார்.

கையில் உள்ள பணம் செலவானவுடன், மீண்டும் தனது கல்யாண லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார். மணிகண்டனை தனது காதல் வலையில் சிக்கவைத்து, நகை பணத்துடன் மாயமான அவர், தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த,

சின்ராஜ் என்பவரை 6வதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும், விசாரணையில் தெரியவந்தது. இதுமட்டுமின்றி மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியாது.